Homeசெய்திகள்விளையாட்டுஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ்ஷிப் கோப்பையை வென்றது இந்திய அணி!

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ்ஷிப் கோப்பையை வென்றது இந்திய அணி!

-

 

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ்ஷிப் கோப்பையை வென்றது இந்திய அணி!
File Photo

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ்ஷிப் கோப்பைக்கான இறுதிப்போட்டியில், மலேசியா அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட்- ஐ.சி.சி. வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்த ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் கோப்பைக்கான இறுதிப்போட்டியில், 4- 3 என்ற கணக்கில் மலேசியா அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் கோப்பையை நான்காவது முறையாகக் கைப்பற்றிய இந்திய அணிக்கு பதக்கங்களையும், கோப்பையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வழங்கினர். இந்த தொடரின் சிறந்த கோலுக்கான விருது தமிழக வீரர் கார்த்திக் செல்வத்திற்கு வழங்கப்பட்டது.

தொடரை வென்ற இந்திய அணிக்கு தமிழக அரசு சார்பில் வீரர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும், பயிற்சியாளர்களுக்கு தலா 2.5 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல், ஹாக்கி இந்தியா சார்பில் வீரர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயும், பயிற்சியாளர் குழுவிற்கு தலா 1.5 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

4ஆவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், இந்த வெற்றி நமது வீரர்களின் அயராது அர்ப்பணிப்பு, கடுமையான பயிற்சி மற்றும் தளராத உறுதியை வெளிப்படுத்தியுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

MUST READ