
16ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெரும்பாலும் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
உலகின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப மையத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
அதிக ரன்களை எடுத்தவர்கள் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் 890 ரன்களைக் குவித்து முதலிடத்தைப் பிடித்துள்ளார். இரண்டாமிடம் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரும், அணியின் கேப்டனுமான டூ பிளஸிக்கு கிடைத்துள்ளது. இந்த ஐ.பி.எல். தொடரில் அவர் 730 ரன்களைக் குவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரரான டேவன் கான்வே 672 ரன்களை எடுத்து மூன்றாமிடத்திலும், பெங்களூரு அணியின் விராட் கோலி 639 ரன்களை எடுத்து நான்காவது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யஷஸ்வி ஜெய்ஷ்வால் 625 ரன்களை எடுத்து ஐந்தாவது இடத்திலும் உள்ளார்.
சாதனை படைத்த தோனி…..ஆரஞ்சு, ஊதா நிற தொப்பிகளைப் பெற்ற வீரர்கள் யார்?
நடந்து முடிந்த ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பந்துவீச்சில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய முதல் ஐந்து வீரர்களில் மூன்று பேர் குஜராத் டைட்டன்ஸ் அணியைச் சேர்ந்தவர்கள். அதன்படி, குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர்கள் முகமது ஷமி 28 விக்கெட்டுகளை எடுத்து முதலிடத்திலும், மோஹித் சர்மா 27 விக்கெட்டுகளை எடுத்து இரண்டாவது இடத்திலும், ரஷீத் கான் 27 விக்கெட்டுகளை எடுத்து மூன்றாவது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த பியூஸ் சாவ்லா 22 விக்கெட்டுகளை எடுத்து நான்காவது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யுஸ்வேந்திர சாஹல் 21 விக்கெட்டுகளை எடுத்து ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.