Homeசெய்திகள்விளையாட்டுஇரண்டாவது டெஸ்ட் போட்டி- வெற்றி பெறும் நிலையில் இந்தியா!

இரண்டாவது டெஸ்ட் போட்டி- வெற்றி பெறும் நிலையில் இந்தியா!

-

 

இரண்டாவது டெஸ்ட் போட்டி- வெற்றி பெறும் நிலையில் இந்தியா!
Photo: BCCI

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

தங்கம் விலை அதிரடியாக குறைந்தது!

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெறும் வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 438 ரன்களும், மேற்கிந்தியத் தீவுகள் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்களும் எடுத்திருந்த நிலையில், நான்காவது நாள் ஆட்டம் நடைபெற்றது. 183 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய வீரர்கள், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

12.2 ஓவரிலேயே இந்திய அணி 100 ரன்களை எடுத்தது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அதிரடியாக விளையாடி அரை சதமடித்தனர். 24 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்களைக் குவித்த இந்திய அணி, டிக்ளேர் செய்து 364 ரன்களை மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஓபிஎஸ் என்னை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்- சசிகலா

நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு மேற்கிந்தியத் தீவுகள் அணி 76 ரன்களை எடுத்துள்ளது.

MUST READ