
ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில், இன்று (செப்.04) இந்தியா- நேபாளம் அணிகள் மோதுகின்றன.
“காவி மிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்!
பாகிஸ்தான் உடனான போட்டி மழையினால் ரத்தான நிலையில், இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது கட்டாயமாகும். தனது முதல் போட்டியில், பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட நேபாளம் அணி, 238 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது.
இந்த நிலையில், இலங்கையின் கண்டி அருகே பல்லகேலேவில் இன்று (செப்.04) பிற்பகல் 03.00 மணிக்கு இந்தியா- நேபாளம் அணிகள் மோதும் போட்டி தொடங்குகிறது. பாகிஸ்தான் உடனான போட்டியில் சொதப்பிய பேட்ஸ்மேன்கள், இந்த போட்டியில் பார்முக்கு திரும்ப முனைப்புக் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிலர் மாற்றப்பட வாய்ப்பிருக்கிறது.
“பா.ஜ.க. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
குரூப்- ஏவில் இருந்து சூப்பர் ஃபோர் சுற்றுக்கு ஏற்கனவே பாகிஸ்தான் முன்னேறிவிட்ட நிலையில், மீதமுள்ள ஒரு இடத்திற்காக, இந்தியா- நேபாளம் அணிகள், மல்லுக்கட்டுகின்றன. இதனிடையே சூப்பர் ஃபோர் சுற்று ஆட்டங்களுக்காக பாகிஸ்தான் அணி லாகூர் சென்றடைந்தது.