திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பட்டபிராமில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் பட்டபிராமில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் அரியலூர், செங்கல்பட்டு, சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பலவேறு மாவட்டங்களை சேர்ந்த 32 அணிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். போட்டிகள் நாக்கவுட் முறையில் கால் இறுதி, அரை இறுதி என நடைபெற்றன. நாக்கவுட் முறையில் நடைபெற்ற போட்டிகளில் அனைத்து சுற்றுகளிலும் வெற்றி பெற்ற MYC முகப்பேர் அணியும் – பட்டாபிராம் சுரேஷ் மெமோரியல் அணியும் இறுதி போட்டியில் பலப்பரிட்சை நடத்தின.
இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை குவித்து வந்தன. ஆரம்பம்முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய MYC முகப்பேர் அணி எதிரணியினரை ஒரு கட்டத்தில் புள்ளிகள் பெற விடாமல் தடுத்து 23 க்கு 11 என்ற புள்ளி கணக்கில் வெற்றி வாகை சூடினர். கபடி போட்டியில் முதலிடம் பிடித்த MYC முகப்பேர் அணிக்கு 150000 ரொக்க பரிசு மற்றும் 6 அடி உயர கோப்பையும், இரண்டாம் இடம் பிடித்த பட்டாபிராம் சுரேஷ் மெமோரியல் அணிக்கு ரூபாய் 100000 மற்றும் 5 அடி கோப்பையும் வழங்க பட்டது. பட்டாபிராம் ஆவடி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி 4ம் பரிசினை தட்டி சென்றது.