Homeசெய்திகள்விளையாட்டுபாலியல் வழக்கில் கிரிக்கெட் வீரருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!

பாலியல் வழக்கில் கிரிக்கெட் வீரருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!

-

17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிசேனுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சந்தீப் லாமிசேன் நேபாள் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் மற்றும் முன்னாள் கேப்டன் ஆவார். இவர் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார். இந்த நிலையில், சந்தீப் லாமிச்சேன் தனக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 வயதான சிறிமி ஒருவர் புகார் கூறியிருந்தார். அந்த புகாரில் சந்தீப் லாமிச்சேன் காத்மண்டுவில் உள்ள தனியார் ஓட்டலில் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக காத்மண்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் சந்தீப் லாமிச்சேன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த குற்றச்சாட்டில் சந்தீப் லாமிச்சேன் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர் அந்த வழக்கில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில், அந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்துள்ள நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றம்சாட்டப்பட்ட கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிசேனுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

MUST READ