Homeசெய்திகள்விளையாட்டுஐ.சி.சி. தரவரிசைப் பட்டியல்- இந்திய வீரர்கள் ஆதிக்கம்!

ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியல்- இந்திய வீரர்கள் ஆதிக்கம்!

-

- Advertisement -

 

ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியல்- இந்திய வீரர்கள் ஆதிக்கம்!
Photo: ICC

ஐ.சி.சி. ஒருநாள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் ஆதிக்கம் நீடிக்கிறது. முதல் ஐந்து இடங்களில் இரு பிரிவிலும் இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மரணத் தண்டனை!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் என்றழைக்கப்படும் ஐ.சி.சி. ஒரு தரவரிசைப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, பேட்டிங்கில் இந்திய வீரர் சுப்மன் கில் 832 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். விராட் கோலி 772 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்திலும், கேப்டன் ரோஹித் சர்மா 760 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

அதேபோல், பந்து வீச்சில் 723 புள்ளிகளுடன் முகமது சிராஜ் இரண்டாவது இடத்திலும், 687 புள்ளிகள் பெற்று ஜஸ்பிரித் பும்ரா நான்காவது இடத்திலும், 682 புள்ளிகள் பெற்று குல்தீப் யாதவ் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். ஆல்ரவுண்டர் தர வரிசை பட்டியலில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 10-வது இடத்தில் நீடிக்கிறார்.

ஐ.சி.சி. ஒருநாள் சிறந்த அணிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 121 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது.

சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் காலமானார்!

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் அடுத்ததடுத்த மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர். நடப்பு உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய வீரர்கள், ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியலில் முன்னணி இடங்களைப் பிடித்து அசத்தியுள்ளனர்.

MUST READ