spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஉலகக்கோப்பைக்கான அட்டவணையை இறுதிச் செய்வதில் நீடிக்கும் சிக்கல்!

உலகக்கோப்பைக்கான அட்டவணையை இறுதிச் செய்வதில் நீடிக்கும் சிக்கல்!

-

- Advertisement -

 

world-cup

we-r-hiring

இந்தியாவில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பைக்கான அட்டவணையை இறுதி செய்வதில் சிக்கல் நீடிக்கிறது.

அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி, வரும் அக்டோபர் மாதம் 15- ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அன்றைய தினம் குஜராத்தில் நவராத்திரி கொண்டாட்டங்கள் களைகட்டும் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கருதி போட்டியை முந்தைய தினம் நடத்த முயற்சிகள் நடக்கிறது. இந்த நிலையில், வரும் நவம்பர் மாதம்12- ஆம் தேதி கொல்கத்தாவில் காளி பூஜை நடைபெறுவதால், இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் உள்ளது.

அதிமுகவுடன் முற்றும் மோதல்- அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்

இது தொடர்பாக, கொல்கத்தா மாநகர காவல்துறை, மேற்கு வங்கம் மாநிலத்தின் கிரிக்கெட் சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. அட்டவணையை இறுதிச் செய்த பிறகே டிக்கெட் விற்பனை தொடங்கும் என்பதால், இந்த பிரச்சனைகளுக்கு பிசிசிஐ விரைந்து தீர்வுக் காண வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

MUST READ