ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.
9வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 20 வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 முன்னணி அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இன்று பிசிசிஐ அறிவித்துள்ளது. ஹர்மன் பிரித் கவுர் தலைமையிலான இந்திய அணிக்கு தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்திய அணியில் அதிரடிக்கு பெயர்போன ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிகஸ், திப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், பந்துவீச்சாளர்கள் ரேணுகா சிங், அருந்ததி ரெட்டி, பூஜா வஸ்திராகர், தமிழ்நாட்டை சேர்ந்த தயாளன் ஹேமலதா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.