spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஇந்திய கிரிக்கெட் வாரியம் எனக்கு போதுமான அளவு வாய்ப்புகள் அளிக்கிறது - நடராஜன்

இந்திய கிரிக்கெட் வாரியம் எனக்கு போதுமான அளவு வாய்ப்புகள் அளிக்கிறது – நடராஜன்

-

- Advertisement -

“இந்திய கிரிக்கெட் வாரியம் எனக்கு போதுமான அளவு வாய்ப்புகள் அளிக்கிறது. கிரிக்கெட் வாரியத்தின் ஒத்துழைப்பால்தான் நான் இந்திய அணி வீரராக உருவாகி உள்ளேன்..” என மதுரையில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியம் எனக்கு போதுமான அளவு வாய்ப்புகள் அளிக்கிறது - நடராஜன்

we-r-hiring

மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் கடை திறப்பு விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அவர், இந்திய கிரிக்கெட் வாரியம் எனக்கு போதுமான அளவு வாய்ப்புகள் அளிக்கிறது.

காயங்கள் காரணமாக சில போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை என்றும்
கிரிக்கெட்டில் அரசியல் எதும் நடைபெறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் வாரியம் எனக்கு போதுமான அளவு வாய்ப்புகள் அளிக்கிறது - நடராஜன்

எந்தவொரு ஏற்ற தாழ்வுகளையும் கிரிக்கெட் வாரியம் வீரர்களிடம் பார்ப்பதில்லை. மேலும் கிரிக்கெட் வாரியத்தின் ஒத்துழைப்பால் தான் நான் இந்திய கிரிக்கெட் வீரராக உருவாகி உள்ளேன் என்றும் IPL கிரிக்கெட்டில் பங்கேற்று சிறப்பாக விளையாடி உள்ளேன் என்று கூறினார்.

முதல்வர் மனைவி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம்

TNPL கிரிக்கெட் தொடக்கத்தை விட தற்போது முன்னேற்றம் அடைந்து உள்ளது எனவும் இளைஞர்களின் கடின உழைப்பால் உயர்ந்த நிலைக்கு செல்லலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

MUST READ