Homeசெய்திகள்விளையாட்டுஐபிஎல் தொடக்க ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்!

ஐபிஎல் தொடக்க ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்!

-

சென்னை அணியை சமாளிக்குமா நடப்பு சாம்பியன் குஜராத்!

ஐபிஎல் டி20 தொடரின் 17வது சீசனின் தொடக்க ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது.

17வது இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி வருகிற மார்ச் 22ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ,சிதம்பரம் ஸ்டேடியத்தில் மார்ச் 22ம் தேதி நடைபெற உள்ள இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை முழுவதும் ஆன்லைன் மூலமாக நடைபெறுவது வழக்கமாகவுள்ளது. மார்ச் 18ம் தேதி காலை 9.30 மணிக்கு PAYTM அல்லது WWW.insider.in என்ற இணையதளம் மூலம் ஒருவருக்கு 2 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் சிஎஸ்கே இணையதளத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியாக பதில் அளிப்பவர்களுக்கு பரிசாக ஆட்டத்தை பார்ப்பதற்கான டிக்கெட்டுகள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள டிக்கெட் ஒன்றின் விலை ரூ.1700 முதல் ரூ.7500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக சிஎஸ்கே நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது.

 

MUST READ