Homeசெய்திகள்விளையாட்டுதாமதமாக பந்துவீச்சு...! ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் - ஒரு போட்டியில் விளையாட தடை!

தாமதமாக பந்துவீச்சு…! ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் – ஒரு போட்டியில் விளையாட தடை!

-

தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் மெதுவாக பந்துவீசிய காரணத்திற்காக மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 67வது லீக் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து லக்னோ அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. அந்த அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 214 ரன்கள் குவித்தது. பின்னர் 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் மும்பை அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. மும்பை அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 196 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் மெதுவாக பந்துவீசிய காரணத்திற்காக மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் மெதுவாக பந்துவீசியதற்காக ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நேற்றைய போட்டியிலும் மும்பை அணி பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது. இதன் காரணமாக மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் மும்பை அணியின் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த சீசனின் முதல் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

MUST READ