
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 10 வருடங்கள் கேப்டனாக செயல்பட்டதற்காக, ரோஹித் சர்மாவிற்கு அணி நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது.

பான் இந்திய அளவில் வெளியாகும் யோகி பாபுவின் போட் …..டீசரை வெளியிடும் 5 ஹீரோக்கள்!
17ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இதையொட்டி, வீரர்களின் மினி ஏலம் வரும் டிசம்பர் 19- ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், குஜராத் அணியின் கேப்டனாகச் செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவை, மும்பை அணி டிரேடு முறையில் 15 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவா? ரோஹித் சர்மாவா? என்ற குழப்பம் நீடித்து வந்தது. இந்த நிலையில், ரோஹித் சர்மாவுக்கு பதிலாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிகரமான அணியாகவும், அதிகம் விரும்பப்படும் அணியாகவும் மாறியிருக்கிறது என்றும், அணியை மேலும் வலுப்படுத்த களத்திலும், வெளியிலும் அவரது வழிகாட்டுதல்களை எதிர்பார்க்கிறோம் எனவும் அணி நிர்வாகம் நன்றித் தெரிவித்துள்ளது.
தனுஷின் D50…. ரிலீஸ் எப்போது தெரியுமா?
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் மாற்றம் தொடர்பான அறிவிப்பால், அந்த அணியின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


