
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது.

டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு!
50 ஓவர் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர், அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், அதில் பங்கேற்கும் அணிகள் இந்தியாவுக்கு வரத் தொடங்கியுள்ளனர். பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஹைதராபாத்திற்கு நேற்றிரவு வந்தது.
விமான நிலையத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு, விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டன. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசாம் உள்ளிட்ட பெரும்பாலான வீரர்கள் முதன்முறையாக இந்தியா வருவதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை, பெங்களூரு நகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்!
வரும் அக்டோபர் 06- ஆம் தேதி நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது பாகிஸ்தான் அணி. அதற்கு முன்னதாக, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளோடு அந்த அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது.