
தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால் தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

அ.தி.மு.க.வை வலுப்படுத்த எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை!
மிலாடி நபி, காந்தி ஜெயந்தி, காலாண்டு தேர்வு விடுமுறை என தொடர் விடுமுறை நாட்களையொட்டி, சென்னையில் வசிப்போர் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். சொந்த ஊர் செல்வோருக்காக, சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றனர்.
அதே சமயம், பலர் சொந்த வாகனங்களில் சொந்த ஊர் நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் நேற்று (செப்.28) மாலை முதல் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலை, குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்டப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
“அனைவராலும் அறியப்பட்ட நடிகரான எனக்கே இந்த நிலை”- நடிகர் பாபி சிம்ஹா வேதனை!
பெருங்களத்தூர் பகுதியில் தற்போது பாலம்கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாலும், வாகனங்கள் நெரிசலில் சிக்கி மெல்ல மெல்ல ஊர்ந்துச் சென்றனர். இதேபோன்று, தொடர் விடுமுறையால், பெங்களூருவில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர் நோக்கிப் புறப்பட்டு சென்றனர்.