Homeசெய்திகள்விளையாட்டுஉலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி- இந்திய அணி பேட்டிங்!

உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி- இந்திய அணி பேட்டிங்!

-

- Advertisement -

 

உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி- இந்திய அணி பேட்டிங்!
File Photo

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வுச் செய்தது.

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா மறைவு – டிடிவி தினகரன் இரங்கல்..

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்று (நவ.15) பிற்பகல் 03.00 மணிக்கு நடைபெற்ற உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கைத் தேர்வுச் செய்தார்.

கடந்த போட்டியில் விளையாடிய அதே 11 வீரர்களுடன் இந்திய கிரிக்கெட் அணி இன்று (நவ.15) களமிறங்குகிறது. மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்யும் அணிக்கே சாதகமான சூழல் உள்ளது.

அரையிறுதிப் போட்டியைக் காண நடிகர் ரஜினிகாந்த், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் உள்ளிட்டோர் வருகைத் தந்துள்ளனர்.

யார் இந்த சங்கரய்யா?- விரிவாகப் பார்ப்போம்!

கடந்த 2019- ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் பெற்ற தோல்விக்கு இந்திய அணி பதிலடி தருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

MUST READ