spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுயார் இந்த சங்கரய்யா?- விரிவாகப் பார்ப்போம்!

யார் இந்த சங்கரய்யா?- விரிவாகப் பார்ப்போம்!

-

- Advertisement -

 

யார் இந்த சங்கரய்யா?- விரிவாகப் பார்ப்போம்!
File Photo

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா (வயது 102) உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது. சங்கரய்யாவின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

we-r-hiring

சங்கரய்யா யார்?- விரிவாகப் பார்ப்போம்!

5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மரணத் தண்டனை!

கடந்த 1921- ஆம் ஆண்டு ஜூலை மாதம் நெல்லையில் பிறந்த சங்கரய்யா, தனது இளமைக்காலம் முதல் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். கடந்த 1939- ஆம் ஆண்டு மீனாட்சி அம்மன் கோயில் நுழைவுப் போராட்டத்தில் பங்கேற்று சிறைச் சென்றவர் சங்கரய்யா. கடந்த 1941- ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்திற்காக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவான போது இருந்த 36 தலைவர்களில் சங்கரய்யாவும் ஒருவர். கடந்த 1986- ஆம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகப் பதவி வகித்து வந்தார். கடந்த 1995- ஆம் ஆண்டு முதல் 2002- ஆம் ஆண்டு வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராகப் பதவி வகித்தார்.

சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் காலமானார்!

கடந்த 1982- ஆம் ஆண்டு முதல் 1991- ஆம் ஆண்டு வரை விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் சங்கரய்யா பணியாற்றி உள்ளார். கடந்த 1967- ல் மதுரை மேற்கு, 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்வுச் செய்யப்பட்டார். கடந்த 1986- ஆம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகப் பதவி வகித்து வந்தார்.

தியாகி சங்கரய்யாவுக்கு தகைசால் விருது வழங்கி தமிழக அரசு கௌரவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ