
செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுப்மன் கில்லை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் என்றழைக்கப்படும் ஐ.சி.சி. தேர்வுச் செய்துள்ளது.

ஆயுதப்பூஜைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்- விரிவான தகவல்!
ஒவ்வொரு மாதமும் சிறப்பாகச் செயல்படும் வீரர்களைத் தேர்வுச் செய்து ஐ.சி.சி. விருது வழங்கி வருகிறது. அந்த வகையில், செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் பரிந்துரையில் இந்தியாவின் சுப்மன் கில், சிராஜ் மற்றும் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் மரன் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக சுப்மன் கில் தேர்வுச் செய்யப்பட்டுள்ளார். அவர் செப்டம்பர் மாதத்தில் மட்டும் இரண்டு சதங்கள், 480 ரன்களைக் குவித்திருக்கிறார். அவரது சராசரி புள்ளி 80 ஆக இருக்கிறது. அண்மையில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பையில் மட்டும் சுப்மன் கில் 302 ரன்களை எடுத்து அசத்தினார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!
அதேபோல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், இரண்டு போட்டிகளில் 178 ரன்களை எடுத்திருந்தார், டெங்கு காய்ச்சல் காரணமாக, பாதிக்கப்பட்டதால் நடப்பு உலகக்கோப்பையில் இரண்டு போட்டிகளைத் தவறவிட்ட சுப்மன் கில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


