spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுதென்னாப்பிரிக்காவில் இருந்து அவசர அவசரமாக தாயகம் திரும்பிய விராட் கோலி!

தென்னாப்பிரிக்காவில் இருந்து அவசர அவசரமாக தாயகம் திரும்பிய விராட் கோலி!

-

- Advertisement -

 

we-r-hiring

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக, அங்கு சென்ற கிரிக்கெட் வீரர் விராட்கோலி, அவசர அவசரமாக நாடு திரும்பியுள்ளார். குடும்பம் தொடர்பான அவசர சூழல் காரணமாக, விராட் கோலி நாடு திரும்பி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு ரூபாய் 72,961.21 கோடியை விடுவித்தது மத்திய அரசு!

எனினும், முதல் டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 26- ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்குள் அவர் தென்னாப்பிரிக்காவுக்கு திரும்பி விடுவார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, கை விரலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக, பேட்டர் ருதுராஜ் கெய்க்வாட், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, கெய்க்வாட்டிற்கு காயம் ஏற்பட்டது.

ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி20 கிரிக்கெட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது. இந்த நிலையில், இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர், வரும் டிசம்பர் 26- ஆம் தேதி தொடங்குகிறது.

MUST READ