
இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் அணி கைப்பற்றியது.
தேசிய கொடியை முகப்புப் படமாக வைக்க பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வேண்டுகோள்!
முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக, சூர்யகுமார் யாதவ் 61 ரன்களையும். திலக் வர்மா 27 ரன்களையும், சாம்சன் 13 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 14 ரன்களையும், அக்சர் பட்டேல் 13 ரன்களையும் எடுத்தனர்.
பின்னர், 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 18 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 171 ரன்களை எடுத்து, இந்திய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அத்துடன், இந்திய கிரிக்கெட் அணிக்குஎதிரான டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் அணி கைப்பற்றியது.
77-வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லியில் பலத்த பாதுகாப்பு!
மேற்கிந்தியத் தீவுகள் அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் பிரான்டன் கிங் 85 ரன்களையும், நிக்கோலஸ் பூரண் 47 ரன்களையும் எடுத்தனர்.