
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் ரிஸ்வான், ஷபிக் அதிரடி சதத்தால், இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் அணி புதிய சாதனையைப் படைத்துள்ளது.

“ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலை”- ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி கடிதம்!
ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (அக்.10) மதியம் 02.00 மணிக்கு நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 344 ரன்களை எடுத்தது.
பின்னர், விளையாடிய பாகிஸ்தான் அணி 48.2 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 345 ரன்களை எடுத்தது. இதனால் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி, பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
வருமான வரித்துறை வளையத்தில் ஜெகத்ரட்சகன்……விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி அதிரடி!
பாகிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஸ்வான் 131 ரன்களையும், ஷபிக் 113 ரன்களையும் எடுத்தனர். குறிப்பாக, உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், அதிக ரன்கள் இலக்கை எட்டிப்பிடித்து பாகிஸ்தான் அணி சாதனைப் படைத்துள்ளது.