Homeசெய்திகள்தமிழக வெற்றிக் கழக மாநாடு - விஜய் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

தமிழக வெற்றிக் கழக மாநாடு – விஜய் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

-

- Advertisement -

தமிழக வெற்றிக் கழக மாநாடு - விஜய் தலைமையில் உறுதிமொழி ஏற்பு விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்று வரும் மாநாட்டு மேடைக்கு த.வெ.க. தலைவர் விஜய் வந்தார். விக்கிரவாண்டி த.வெ.க. மாநாட்டு திடலில் 101 அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடியை  ரிமோட் மூலம் மேடையில் இருந்தவாறே த.வெ.க. தலைவர் விஜய் யேற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து விக்கிரவாண்டியில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் உறுதிமொழி ஏற்றனர். தமிழக வெற்றிக் கழக பொருளாளர் வெங்கட்ராமன் உறுதிமொழியை முன்மொழிந்தார். தியாகத்தை போற்றுவோம், தியாகிகளின் இலக்கை நிறைவேற்ற பாடுபடுவோம். ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம், நல்லிணக்கத்தை பின்பற்றுவோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

MUST READ