Homeசெய்திகள்தமிழ்நாடுஅத்தியாவசியப் பொருட்களை வைத்திருக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!

அத்தியாவசியப் பொருட்களை வைத்திருக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!

-

 

சென்னைக்கு புதிய மாவட்ட ஆட்சியர் நியமனம்!
Photo: TN Govt

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக, பால், குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கையிருப்பில் வைத்துக் கொள்ள பொதுமக்களை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

புயல் எதிரொலி- நான்கு மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை!

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

புயல் காரணமாக, பால், குடிநீர், உணவு, மருந்துகளை கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். கயிறு, மெழுகுவத்தி, உலர் உணவு, மருந்து, குடிநீர், குளுக்கோஸ் தயாராக வைத்திருக்க வேண்டும். ஆஸ்பெஸ்டாஸ், தகர ஷீட்டு காற்றில் பறக்கலாம் என்பதால் ஆபத்துள்ள பகுதிகளில் நிற்கக்கூடாது. அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு வானொலி, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செய்தியாளர்களை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

எச்சரிக்கை: மிக்ஜம் தீவிர புயலாக கரையை கடக்கும் – வானிலை மையம் தகவல்..

புயல் பாதிப்பு அவசர உதவிக்கு மாநில அவசர கால செயல்பாட்டு மையம் 1070, வாட்ஸ் அப் எண் 94458- 69848, 1077ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புக் கொள்ளலாம். புயல் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதாக அறிவிப்பு வரும் வரை மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

MUST READ