Homeசெய்திகள்தமிழ்நாடுதிருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு

திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு

-

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை 2ஆம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்குட்பட்ட பாசன நிலங்களுக்கு வரும் 18ம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், திருமூர்த்தி அணையிலிருந்து, பாலாறு படுகை இரண்டாம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்குட்பட்ட பாசன நிலங்களுக்கு நான்கு (4) சுற்றுகள் வரும் 18ஆம் தேதி முதல் டிசம்பர் 16ம் தேதி வரை 120 நாட்களுக்குள் உரிய இடைவெளிவிட்டு 8 ஆயிரம் மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டு உள்ளது.

tamilnadu assembly

தண்ணீர் திறப்பால், கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு மற்றும் சூலூர் வட்டங்களிலுள்ள நிலங்களும், திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர், காங்கேயம் மற்றும் தாராபுரம் வட்டங்களிலுள்ள நிலங்களும் என மொத்தம் 94 ஆயிரத்து 201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

MUST READ