spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசு போக்குவரத்துக்கு 1614 புதிய பேருந்துகள் வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது

அரசு போக்குவரத்துக்கு 1614 புதிய பேருந்துகள் வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது

-

- Advertisement -

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு பிஎஸ் 6 வகை 1,614 புதிய டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.

தமிழக போக்குவரத்துக் கழகங்களில் பழைய பேருந்துகளைக் கழித்து, புதிய பேருந்துகளை பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து, தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்களுக்கும் தரமான போக்குவரத்து சேவைகளைத் தொடர்ந்து வழங்கிட புதிய பேருந்துகளை வாங்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

we-r-hiring

இந்நிதியாண்டில் 3000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பை வெளியிட்டார்.

இதன்படி, 2024-25 ஆம் நிதியாண்டில் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ. 1535.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், பிஎஸ் 6 வகை கொண்ட 1,614 புதிய டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.

இதன்படி, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 245, விழுப்புரம் கோட்டத்திற்கு 347, சேலம் கோட்டத்திற்கு 303, கோவை கோட்டத்திற்கு 105, கும்பகோணம் கோட்டத்திற்கு 305, மதுரை கோட்டத்திற்கு 251, நெல்லை கோட்டத்திற்கு 50 என்று மொத்தம் 1,614 பேருந்துகள் வாங்க டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஜெர்மன் வங்கி நிதி உதவியில் இந்த பேருந்துகள் வாங்கப்பட உள்ளது.

இந்த டெண்டரில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நிறுவனங்கள் டிசம்பர் 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ