Homeசெய்திகள்தமிழ்நாடு"மண்டியிடத் தேவையில்லை... அவமானம் நேர்ந்தால் அது தமிழ்நாட்டிற்கே அவமானம்!" விஜய்க்கு சி.பி.எம். எச்சரிக்கை!

“மண்டியிடத் தேவையில்லை… அவமானம் நேர்ந்தால் அது தமிழ்நாட்டிற்கே அவமானம்!” விஜய்க்கு சி.பி.எம். எச்சரிக்கை!

-

- Advertisement -

காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகப் பெங்களூரு செல்லத் திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் கூறியதற்கு, சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.எம்.) உறுப்பினர் செல்லசாமி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். சட்ட ரீதியான போராட்டத்தை விடுத்து கர்நாடகாவிடம் தமிழ்நாட்டின் உரிமையைத் அடகு வைக்கும் வகையில் மண்டியிடத் தேவையில்லை என்றும், உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்."மண்டியிடத் தேவையில்லை... அவமானம் நேர்ந்தால் அது தமிழ்நாட்டிற்கே அவமானம்!" விஜய்க்கு சி.பி.எம். எச்சரிக்கை!

“அவமானம் நேர்ந்தால் அது தமிழ்நாட்டிற்கே அவமானம்” – செல்லசாமி வலியுறுத்தல்சட்டப்பேரவையில் காவிரி பிரச்சனை குறித்துப் பேசிய சி.பி.எம். உறுப்பினர் செல்லசாமி:

we-r-hiring

“காவிரி நீருக்காகத் தமிழ்நாடு அரசு கர்நாடகாவிடம் போய் மண்டியிட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. மேகதாது விவகாரத்தில் நாம் நீதிமன்றத்தின் மூலம் சட்ட ரீதியாகவே உரிமைகளை வென்றெடுக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாகத் தேடிச் சென்று அவமானத்தைச் சந்திக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? அப்படி ஒருவேளை அங்கே ஏதேனும் அவமானம் நேர்ந்தால், அது முதலமைச்சருக்கு மட்டும் ஏற்படும் அவமானம் அல்ல; அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே ஏற்படும் அவமானம்!

எனவே, பெங்களூரு செல்லும் திட்டத்தை உடனடியாகக் கைவிட்டுவிட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வேண்டும்” என்று தமிழக அரசை வலியுறுத்தினார்.

“தமிழக மக்களுக்காக எதையும் தாங்கத் தயார்!” – முதலமைச்சர் விஜய் பதில்
சி.பி.எம். உறுப்பினரின் பேச்சுக்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், “காவிரிப் பிரச்சினையில் நேரடி பேச்சுவார்த்தை மூலம் பேசிப் பார்த்தால் ஏதேனும் தீர்வு கிடைக்காதா என்ற நல்ல எண்ணத்தில்தான் நான் பெங்களூரு செல்லத் திட்டமிட்டேன். இந்த அமைதி பேச்சுவார்த்தை முயற்சியில் ஏதேனும் தடங்கலோ அல்லது அவமானமோ ஏற்பட்டால் கூட, என் தமிழ்நாட்டு மக்களுக்காகவும் அவர்களின் வாழ்வாதாரத்திற்காகவும் அதைத் தாங்கிக் கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன்” என்று மிகவும் நெகிழ்ச்சியுடனும் உருக்கமாகவும் தெரிவித்தார்.

பேரவையில் பரபரப்பு
காவிரி நீர் உரிமை மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சரின் நேரடிப் பேச்சுவார்த்தை முயற்சிக்கும், எதிர்க்கட்சிகள் மற்றும் தோழமைக் கட்சிகளின் சட்டப் போராட்ட ஆதரவு நிலைப்பாட்டிற்கும் இடையே நடந்த இந்த காரசார விவாதம் சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

“எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்கத் தயக்கமில்லை… ஆனால், அதற்கு முன் காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்!” – திமுக நிபந்தனை!

MUST READ