Homeசெய்திகள்தமிழ்நாடு"1,000 கோடி மதிப்பில் நிவாரணத் தொகுப்பு"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

“1,000 கோடி மதிப்பில் நிவாரணத் தொகுப்பு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

-

 

"தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை கைவிடுக"- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
Photo: DMK

பெருமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு வீட்டு வசதி, தொழிற்கடன் உள்ளிட்ட 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணத் தொகுப்பை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

“எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து கட்சியை மீட்பதே எண்ணம்”- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். மழை, வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் மற்றும் பழுது பார்க்க ரூபாய் 385 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 385 கோடியில் 4,577 புதிய வீடுகள், 9,975 வீடுகளுக்கு பழுது நீக்கம் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உப்பளத் தொழிலாளர்களுக்கு ரூபாய் 3,000 நிவாரணத் தொகை வழங்கப்படும். நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பயிர் சேதங்களுக்கு ரூபாய் 250 கோடி நிவாரணம் தரப்படும். சென்னை, தூத்துக்குடி, நெல்லையில் சிறு வணிகர்களுக்கு ரூபாய் 1 லட்சம் வரை சிறப்பு கடன் வழங்கப்படும்.

“1,000 கோடி மதிப்பில் நிவாரணத் தொகுப்பு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

ரூபாய் 10,000 வரை 4 சதவீத வட்டியிலும், ரூபாய் 1 லட்சம் வரை 6 சதவீதம் வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படும். திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்திலும் சேதமடைந்த வீடுகளுக்கு பதில் புதிய வீடுகள் கட்ட நிதி வழங்கப்படும். வீடுகளைப் புதிதாக கட்டுவதற்கு ரூபாய் 4 லட்சமும், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூபாய் 2 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பயிர் சேதங்களை ரூபாய் 250 கோடி நிவாரணம் வழங்கப்படும். 8 மாவட்டங்களில் 2.64 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சேதமடைந்த பயிர்களுக்கு ரூபாய் 250 கோடியில் நிவாரணம் வழங்கப்படும்”. இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ