spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகும்மிடிப்பூண்டி அருகே சரக்கு லாரி மீது ஈச்சர் லாரி மோதி விபத்து - ஓட்டுநர் பலி

கும்மிடிப்பூண்டி அருகே சரக்கு லாரி மீது ஈச்சர் லாரி மோதி விபத்து – ஓட்டுநர் பலி

-

- Advertisement -

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் புறவழிச் சாலையில் சரக்கு லாரி  மீது பின்னால் வந்த ஈச்சர் லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்தார்.

சென்னை அம்பத்தூரில் இருந்து, ஆந்திர மாநிலம் ஸ்ரீட்டி நோக்கி ஈச்சர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. ஈச்சர் லாரியை பூந்தமல்லி நசரத்பேட்டையை சேர்ந்த நாகராஜ் (52) என்பவர் ஒட்டிச்சென்றார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் புறவழிச் சாலையில் சென்றபோது ஈச்சர் லாரி முன்னால் சென்ற சரக்கு லாரியின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

we-r-hiring

இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி ஓட்டுநர் நாகராஜ் (52) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், லாரி ஓட்டுநர் ஆந்திர மாநிலம் வைசாத்தைச் சேர்ந்த லட்சுமணன் (56) படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து வந்த கும்மிடிப்பூண்டி போலீசார், காயம் அடைந்த ஓட்டுநர் லட்சுமணனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ