மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயில் இயக்கப்பட்ட 125 ஆவது ஆண்டையொட்டி ரயில் நிலையத்தில் சுற்றுலாப் பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினா்.
1899 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீலகிரி மலை ரயில் பயணம் தொடங்கியது. ஆசியாவில் பற்சக்கரங்களில் இயங்கும் ஒரே மலை ரயில் நீலகிரி மலை ஆகும்.
மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான பாதை சரிவாக இருப்பதால் தண்டுவாளங்களுக்கிடையே பற்சக்கரங்கள் அமைக்கப்பட்டு அதனை பற்றி கொண்டே ரயில் இயங்குகிறது.இந்த மலை ரயிலானது 208 வளைவுகளின் வழியாக 250 பாலங்களை கடந்த செல்ல 5 மணி பயணம் நேரமாகும்.
இன்றுடன் தனது 125 ஆவது ஆண்டினை நிறைவு செய்துள்ளது. மேலும் இந்த தினத்தை ரயில்வே ஊழியர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கியும், கேக் வெட்டியும் புகைப்படங்கள் எடுத்தும் கொண்டாடி மகிழ்தனர்.