Homeசெய்திகள்தமிழ்நாடுதிருச்சி தனியார் காப்பகத்தில் 2 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

திருச்சி தனியார் காப்பகத்தில் 2 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

-

திருச்சி தனியார் காப்பகத்தில் 2 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

திருச்சியில் தனியார் ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் இரண்டு கை குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

hospital

திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகம் (சாக்சீடு) செயல்பட்டு வருகிறது. அந்த காப்பகத்தில் அரசு மருத்துவமனைகளில் விட்டு செல்லப்படும் தொட்டில் குழந்தைகள், சாலையோரம் வீசப்படும் பிறந்த பிஞ்சு குழந்தைகள் இங்கு கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் 33 குழந்தைகள் அந்த காப்பகத்தில்
பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதில் 8 குழந்தைகளுக்கு கடந்த மாதம் 31-ம் தேதி சளி மற்றும் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து காப்பக நிர்வாகிகள் உடனடியாக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் அந்த குழந்தைகளை அனுமதித்தனர். 8 குழந்தைகளுக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதில் நான்கு குழந்தைகள் டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மேலும் நான்கு குழந்தைகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் கைக்குழந்தைகள் என்பதால் குழந்தைகள் வார்டில் அவர்களுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 3 மாத பெண் குழந்தை ஒன்றும், பிறந்து 57 நாட்களான பெண் குழந்தை ஒன்றும் இரு பெண் குழந்தைகள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு குழந்தை உயிரிழந்து என்பது குறிப்பிடத்தக்கது

தாய்ப்பால் இன்றி வளரும் இக்குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உயிரிழப்பதாக மருத்துவத் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மேலும் அந்த காப்பகத்தில் குழந்தைகளை பராமரிக்க போதிய ஆட்கள் இல்லாததால் அனைத்து குழந்தைகளையும் பராமரிப்பதில் சிரமம் ஏற்படுவதாகவும் அதன் காரணமாகவே இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதாக தெரிகிறது.

MUST READ