திமுக அரசு பொறுப்பேற்ற பின் 20 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டு உள்ளது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பின் தமிழகத்தில் 20 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளதாக திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அமைச்சா் சக்கரபாணி தெரிவித்துள்ளாா்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு பயன் அளிக்க கூடிய பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி அதனை செயல்படுத்தியும் வருகிறாா். அவரது இந்த சீரிய பணி தமிழ் நாட்டில் வாழும் கடைக் கோடி மக்களுக்கும் சென்றடையும், வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா். அதுமட்டுமல்லாமல் இதுவரை 65,600 பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 3,500 பேருக்கு குடும்ப அட்டைகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றும் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்.பிக்களுக்கு முதல்வர் வாழ்த்து…
