செங்கல்பட்டில் பாஜக நிர்வாகியை தாக்கிய 4 பேர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருக்கழுக்குன்றத்தில் வசித்து வருபவர் தனசேகர். இவர் பாஜக மாநில நிர்வாகியாக உள்ளார். இவர் கஞ்சா விற்பனை செய்பவர்கள் குறித்து கஞ்சா போதையில் இருந்த சற்று மனநலம் குன்றிய இளைஞரிடம் கேட்டு அதை வீடியோவாக பதிவு செய்து முகநூலில் வெளியிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்கல் கோரி திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் அகமது பாட்ஷா என்பவர் புகார் அளித்துள்ளார்.
புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்து சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சாலை மறியலில் ஈடுபட்டும் இது குறித்து எந்த பதிலும் கூறாததால் அகமது பாட்ஷா உறவினர்கள் 4 பேர் கொண்ட கும்பல், திருக்கழுக்குன்றம் பகுதியில் தனது காரில் சென்ற பாஜக நிர்வாகி தனசேகரை வழிமறித்து கையில் கிடைத்த இரும்பு பொருட்களை வைத்து சரமாரியாக தாக்கியதில் தலை மற்றும் முகங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் தனசேகர் மயக்கமடைந்தார். அப்பகுதியில் இருந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் தாக்குதல் நடத்தி தப்பியோடிய அகமது பாஷா (33), மன்சூர் அலி (32), சையது அப்துல் ரகுமான்(20), இப்ராஹிம்(35) என்ற நான்கு பேரை நேற்று இரவு கைது செய்த திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை மேற்கொண்டு இன்று காலை திருக்கழுகுன்றம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தி பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர்.
