Homeசெய்திகள்தமிழ்நாடுதடுப்பூசி போட்ட மறுநாளே குழந்தை உயிரிழப்பு

தடுப்பூசி போட்ட மறுநாளே குழந்தை உயிரிழப்பு

-

- Advertisement -

திண்டுக்கல் அருகே தடுப்பூசி போட்ட மறுநாளே குழந்தை உயிரிழப்பு என பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள பிள்ளையார் நத்ததைச் சேர்ந்தவர் விஜயகுமார், இவரது மனைவி சுகன்யா. விஜயகுமார் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர்கள் தற்பொழுது நல்லாம்பட்டி பகுதியில் வசித்து வருகின்றனர். இதனிடையே விஜயகுமார் – சுகன்யா தம்பதிகளுக்கு ஏற்கனவே மூன்று வயதில் மகன் உள்ளான். இந்நிலையில் விஜயகுமார் – சுகன்யாவிற்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு இரண்டாவதாக குரு பிரசாத் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது.

we-r-hiring

குழந்தை குரு பிரசாத்துக்கு நேற்று 45வது நாள் தடுப்பூசி போடப்பட்டது. ஊசி போட்டதன் காரணமாக குழந்தைக்கு காய்ச்சல் அடித்துள்ளது இந்நிலையில் இன்று காலை குழந்தை குரு பிரசாத் தாய்ப்பால் குடித்துள்ளார். சிறிது நேரத்திற்கெல்லாம் வாய், மூக்கு ஆகியவற்றிலிருந்து ரத்தம் வந்துள்ளது. இதனால் பதறிப் போன பெற்றோர் உடனடியாக குழந்தை தூக்கிக்கொண்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனை அடுத்து தற்பொழுது குழந்தை இறந்ததற்கான காரணம் தெரியாமல் குழந்தையின் பிரேதத்தை வாங்க மாட்டோம் என கூறி பெற்றோர் கூறிவருகின்றனர்.

MUST READ