spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!

ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!

-

- Advertisement -

 

மழை

we-r-hiring

தமிழகத்தின் தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று (அக்.24) கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் குழுவினரை அழிக்க சிறப்புப் படையை உருவாக்கிய இஸ்ரேல்!

இது தொடர்பாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நேற்று (அக்.23) காலை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை 05.30 மணியளவில் ஹாமூன் புயலாக வலுப்பெற்று, இன்று (அக்.24) காலை 02.30 மணியளவில் தீவிர புயலாக வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.

காலை 08.30 மணியளவில் இது மேலும் வலுப்பெற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மிக தீவிர புயலாக நிலவுகிறது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து வலுவிழந்து புயலாக வங்கதேச கரையை கெபுபரா (Khepupara) மற்றும் சிட்டகாங் (Chittagong) இடையே நாளை (அக்.25) மாலை கடக்கக்கூடும்.

விசா இல்லாமல் இனி இலங்கைக்கு செல்லலாம்!

நேற்று (அக்.23) மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிக தீவிர ‘தேஜ்’ புயல் இன்று (அக்.24) காலை 02.30 முதல் 03.30 மணியளவில் தெற்கு அல்-கைதாக்கு (Al-ghaidah) மிக அருகில் ஏமன் கடற்கரையைக் கடந்தது.

தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஆறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (அக்.24) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

உலகின் மிக வயதான நாய் உயிரிழப்பு!

வட கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சுறாவளி காற்று மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 140 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

MUST READ