spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு65 சவரன் நகை மாயம் - திருடு போனதா ? நடந்தது என்ன?

65 சவரன் நகை மாயம் – திருடு போனதா ? நடந்தது என்ன?

-

- Advertisement -

சொந்த ஊருக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது பையில் வைத்திருந்த 65 சவரன் நகை காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நகையை எங்கு  தவறவிட்டார் என போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

65 சவரன் நகை மாயம் - திருடு போனதா ? நடந்தது என்ன?

we-r-hiring

சென்னை அரும்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் செல்வி(40). இவர் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் உள்ள தனது தந்தையை பார்ப்பதற்காக தன் குழந்தையுடன் சென்றுள்ளார்.

இன்று அதிகாலை செல்வி அரசு விரைவு பேருந்தில் போளூரில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து இறங்கி பின்பு அங்கிருந்து ஆட்டோவில் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டிற்கு வந்த பார்த்தபோது 65 சவரன் நகை வைத்திருந்த பை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். செல்வி உடனே இது குறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து செல்வி ஆட்டோவில் நகை பையை விட்டாரா அல்லது பேருந்தில் வரும் போது மறந்து வைத்து விட்டாரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

‘விடாமுயற்சி’ ரிலீஸ் ஒத்திவைப்பு….. படக்குழு வெளியிட்ட அறிவிப்பால் ரசிகர்கள் ஏமாற்றம்!

MUST READ