சென்னையில் இனி 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த பிரதமர் நரேந்திர மோடி!
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், அதிகரித்து வரும் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு மற்றும் அவர்களின் காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதற்காகவும் இரண்டு வழித்தடங்களில் நெரிசல் மிகு நேரங்கள் இல்லாது மற்ற நேரங்களில் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் வரும் நவம்பர் 27- ஆம் தேதி திங்கள்கிழமை முதல் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்காக ‘அய்யன்’ செயலி அறிமுகம்!
மெட்ரோ ரயில் பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.