spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபாஜக கொடியுடன் காரில் வலம் வந்த 9 ரவுடிகள் - போலிசாரிடம் இருந்து தப்பியேட்டம்

பாஜக கொடியுடன் காரில் வலம் வந்த 9 ரவுடிகள் – போலிசாரிடம் இருந்து தப்பியேட்டம்

-

- Advertisement -

பாரதிய ஜனதா கட்சி கொடியை காரில்  கட்டிக் கொண்டு  ஆயுதங்களுடன் மூன்று காரில் வந்த 9 பேர் கொண்ட கும்பலை , போலீசார் தடுத்து நிறுத்திய போது வாகனத்தை நிறுத்திவிட்டு அனைவரும் தப்பி ஓட்டம்.  பல்வேறு கொலை,  கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய அனைவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.பாஜக கொடியுடன் காரில் வலம் வந்த 9 ரவுடிகள் - போலிசாரிடம் இருந்து தப்பியேட்டம்

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ,  சந்தைப்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு சாலையோரமாக  பாரதிய ஜனதா கட்சிகொடி கட்டிய கார் ஒன்று மற்றும் இரண்டு கார்கள்  நின்று கொண்டிருந்ததாகவும், இந்த கார்களில் வந்த ஒன்பது பேர் கொண்ட  கும்பல்,  அப்பகுதியில் உலாவி வருவதாகவும் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதனை அடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு தீவட்டிப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் சந்தைப்பேட்டை பகுதிக்கு சென்று அங்கிருந்த ,  ஒன்பது பேரையும் சுற்றி வளைத்து விசாரித்தனர்.

we-r-hiring

அப்போது போலீசாருக்கு போக்கு காட்டி விட்டு அனைவரும் வேறொரு காரில் தப்பி சென்று விட்டனர். இதையடுத்து அவர்கள் விட்டுச் சென்ற இரண்டு கார்களையும் காவல்துறையினர் சோதனை செய்த போது ,  அதில் கத்தி , அரிவாள்  உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது.  இதனைத் தொடர்ந்து இரண்டு கார்களையும் பறிமுதல் செய்த போலீசார்,  தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் , ஏற்கனவே  பூசாரிப்பட்டி பகுதியில் நகை அடகு கடை வைத்துள்ள முதியவர் மற்றும் மூதாட்டியை மிரட்டி கட்டி போட்டு அவர்களிடம் இருந்து 350 சவரன் நகைகளை கொள்ளை அடித்த சம்பவத்தில் ஈடுபட்ட பண்ணப்பட்டியைச் சேர்ந்த பிரபல ரவுடியும்  பாஜக-வை சேர்ந்த மணிகண்டன், அவரது நண்பர் சசிகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் என தெரியவந்தது.

மேலும் இந்த கும்பல் ஏற்கனவே  தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் பண்ணப்பட்டியைச் சேர்ந்த ஸ்டுடியோ அதிபரை கடத்தி தர்மபுரி மாவட்டம்,  அரூரில் உள்ள தென்னந்தோப்பில் அடைத்து வைத்து பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.  மேலும் பாஜகவை சேர்ந்த பண்ணப்பட்டி மணிகண்டன் மீது,  தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் நான்கு வழக்குகளும்,  நாமக்கல் காவல் நிலையத்தில் மூன்று வழக்குகள்,  எருமைப்பட்டி காவல் நிலையத்தில் ஒரு வழக்கு,  சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் இரண்டு வழக்கு ,  அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் இரண்டு வழக்கு ,  நாமக்கல் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் ஒன்று என இவர மீதும்  மற்றும் இவரின் கூட்டாளிகள்  மீது 10க்கும் மேற்பட்ட கொள்ளை,  ஆள் கடத்தல் வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில்  இந்த கும்பல்  ஏதாவது கொலை,  கொள்ளை நடத்த திட்டம் தீட்டி வந்தார்களா? எனவும்  போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . மேலும் தப்பி ஓடிய 9 பேர் மீதும் ஆயுதம் வைத்திருந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்! 

 

MUST READ