டிடிஎஃப் வாசன் சென்ற கார் விபத்தில் சிக்கியது
சென்னை அமைந்தகரை அருகே டிடிஎஃப் வாசன் சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Twin Throttlers என்னும் யூட்யூப் சேனல் மூலம் Moto Vlogging செய்து 2K கிட்ஸ்கள் மத்தியில் பிரபலமானவர்தான் TTF வாசன். கோவையை பூர்விகமாக கொண்ட TTF வாசன் பைக்குகளில் ஒவ்வொரு ஊராக சுற்றுலா சென்று தனது பயணங்களை வீடியோவாக யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். தனக்கென ஒரு இளம் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள TTF வாசனின் யூட்யூப் சப்ஸ்கிரைபரின் எண்ணிக்கை மட்டும் 2 மில்லியனை தாண்டி உள்ளது. அதேசமயம் பலமுறை இவர் போக்குவரத்து விதிகளை மீறியதாக காவல்துறை வழக்குகளும் இவர் மீது பதியப்பட்டுள்ளன. இருப்பினும் இவர் மோட்டோ வ்லாகிங்கை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் சென்னை அமைந்தகரை அருகே டிடிஎஃப் வாசன் சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் சிக்கிய காரில் இருந்து இறங்கிய டிடிஎஃப் வாசன் ஆட்டோவில் ஏறி சென்றார். சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் அதிவேகமாக சென்ற யூ-டியூபர் TTF வாசனின் கார் மோதி பைக்கில் சென்றவர் காயம் அடைந்த நிலையில், யூடியூபர் TTF வாசன் மீது அண்ணாநகர் போக்குவரத்து காவலர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர்
மஞ்சள் வீரன் படப்பிடிப்புக்காக சென்னையில் டிடிஎஃப் வாசன் முகாமிட்டுள்ளார். டிடிஎஃப் வாசன் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் முதல் போஸ்டர் அண்மையில் வெளியானது குறிப்பிடதக்கது.