வாணியம் பாடியில் 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இடத்தின் மத்தியில் ராட்சத பாறை விழுந்தது.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, நேதாஜி நகர், தெற்கு மில்லத் நகர் பகுதியில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் சாலை ஓரம் முனியப்பன் என்பவர் வீட்டின் அருகில் மலைக்குன்று மீது ராட்சத பாறை இருந்துள்ளது. கடந்த இரண்டு, மூன்று நாட்களாக காலை, மாலை மற்றும் இரவு முழுவதும் மழை பெய்துள்ளது. இதன் காரணமாகவே மண்சரிந்து ராட்சத பாறை சாலையின் நடுவில் விழுந்து நின்றுள்ளது. பாறை விழுந்த நேரம் இரவு என்பதால் எவ்வித உயிா் சேதமோ, பொருட் சேதமோ ஏதும் ஏற்படவில்லை.
சாலையின் இருபுறமும் வீடுகள் இருந்தாலும் சாலை நடுவில் ராட்சத பாறை விழுந்து உள்ளதால், பெரும் ஆபத்து தவிா்க்கப்பட்டது. அவ்வழியாக செல்லும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளது. சாலை நடுவில் உள்ள ராட்சத பாறை உடனடியாக அகற்ற சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அப்பகுதியில் ஆபத்தாக உள்ள ராட்சத பாறைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பா.ஜ.கவை எதிர்க்கிறோம் என நாடகம் போடும் தி.மு.க – சீமான் குற்றச்சாட்டு
