spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிருப்பதியில் நாட்டு பசுவின் பாலைக் கொண்டே அபிஷேகம் செய்ய கோரிய மனு தள்ளுபடி!

திருப்பதியில் நாட்டு பசுவின் பாலைக் கொண்டே அபிஷேகம் செய்ய கோரிய மனு தள்ளுபடி!

-

- Advertisement -

திருப்பதி கோவிலில் நாட்டு பசுவின் பாலைக் கொண்டே அபிஷேகம் செய்ய வேண்டும் என உத்தரவிட கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.திருப்பதியில் நாட்டு பசுவின் பாலைக் கொண்டே அபிஷேகம் செய்ய கோரிய மனு தள்ளுபடி!ஆந்திர மாநிலம் திருமலா திருப்பதி கோவிலில் நாட்டு பசுவின் பாலை கொண்டே அபிஷேகம் செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம் சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எம்.எம் சுந்தரேஷ், பசு என்றால் பசு தான்! அதில் என்ன பிரித்துப் பார்க்க வேண்டிய உள்ளது? என மனுதாரரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு மனுதாரர், ஆகம சாஸ்திரங்கள் விதிப்படி நாட்டுப் பசுவின் பாலை மட்டுமே அபிஷேகத்துக்கு பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார். அதற்கு நீதிபதி, மனிதன் மட்டுமே மதம், சாதி, மாநிலம், மொழி உள்ளிட்ட வகையில் பிரிந்து காணப்படுகிறான். ஆனால் கடவுள் அப்படியல்ல! கடவுளுக்கு மனிதர்கள் மற்றும் அனைத்தும் ஒன்றுதான் என தெரிவித்தார்.

இதற்கு மனுதாரர், ஏற்கெனவே திருப்பதி தேவஸ்தானம் தீர்மானத்தில் நாட்டு பசுவின் பாலை தான் அபிஷேகத்திற்கு பயன்படுத்த வேண்டும் என விதிமுறையுள்ளது. அதனையே அமல்படுத்த வேண்டும் என கூறுகிறோம். எனவே இந்த விவகாரத்தில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்ததோடு கடவுளுக்கான பூஜைகள் அபிஷேகங்கள் ஆகாம விதிகளின் படி தான் நடத்தப்பட வேண்டும் என வாதிட்டனர்.திருப்பதியில் நாட்டு பசுவின் பாலைக் கொண்டே அபிஷேகம் செய்ய கோரிய மனு தள்ளுபடி!இதனை தொடர்ந்து நீதிபதிகள், எந்த ஒரு பூஜையும் வழிபாட்டு முறைகளும் கடவுளுக்கு செய்யும் போது அது கடவுள் மீதான நமது அன்பின் வெளிப்பாடாகும். அதற்கு மேல் ஒன்றும் இல்லை. இந்த விவகாரம் தொடர்பான கோரிக்கையை உயர்நீதிமன்றத்திடம் வையுங்கள் என தெரிவித்ததோடு, இதைவிட முக்கியமான பிரச்சனைகள் தொடர்பாக பல விவகாரங்கள் நீதிமன்றத்தில் உள்ளது.

we-r-hiring

கடவுள் மீதான உண்மையான அன்பு என்பது சக மனிதர்களுக்கும் உயிரினங்களுக்கும் சேவை செய்வதில் தான் உள்ளது மாறாக இதுபோன்ற விவகாரத்தில் அல்ல என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மனுதாரர் மனுவை திரும்ப பெறுவதற்கு அனுமதி கோரிய நிலையில் அனுமதி வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்வதாகவும் உத்தரவிட்டனர்.

அ.தி.மு.க உட்கட்சி விவகாரம்…விரைவில் முடிவு எடுக்கப்படும் – தேர்தல் ஆணையம் விளக்கம்

MUST READ