spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதவெக கட்சி கொடியில் புதிய சர்ச்சை....!

தவெக கட்சி கொடியில் புதிய சர்ச்சை….!

-

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி யின் மாநில தலைவர் ஆனந்தன் கருத்து தெரிவித்துள்ளார்.

 கட்சி கொடியில்இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கடந்த 1993 ஆம் ஆண்டு தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட யானை சின்னத்தை அசாம், மணிப்பூர் தவிர வேறு எந்த மாநில கட்சிகளும் எந்த வடிவிலும் கட்சி கொடியிலோ அல்லது சின்னமாகவோ பயன்படுத்த கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு சட்ட திருத்தம் கொண்டு வந்து அறிவிப்பு வெளியிட்டது.

we-r-hiring

உண்மை இப்படி இருக்க, இந்த அறிவிப்பு குறித்து தெரியாமல், சகோதரர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியில் இரண்டு யானைகள் இடம் பெற்றிருப்பது விதிகளை மீறும் செயலாகும். மேலும், தேர்தல் காலங்கள் வாக்காளர்கள் மத்தியில் இது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும்.

மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

எனவே, உடனடியாக தங்கள் கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானைகளை அகற்ற வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன். மீறும் பட்சத்தில் இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்க்கொள்ள பகுஜன் சமாஜ் கட்சி தயாராக உள்ளது என்பதையும் தெரிவித்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

தவெக கட்சி கொடியில் புதிய சர்ச்சை....!இதற்கு முன் கட்சி பெயரை அறிவித்தபோது வெற்றிக் கழகத்திற்கு ‘க்’ போடாமல் அறிவித்தார். அதன் பின்னர் தமிழ் அறிஞர்கள் ஆலோசனை கூறியதால் “க்” சேர்த்து தமிழக வெற்றிக் கழகம் என்று அறிவித்தார்.இப்போது கொடியிலும் சர்ச்சை எழுந்துள்ளது.

MUST READ