ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் புதிய நடைமுறை நவம்பர் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

ரயில்வே கொண்டு வந்த திட்டம்தான் அட்வான்ஸ் புக்கிங். பண்டிகை காலம் தொடங்கி சாதாரண ரிசர்வேஷன் வரை அனைத்திற்கும் 120 நாட்கள் முன்னரே பதிவு செய்வதற்கான வசதிகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் இனி அப்படி இல்லை இனிமேல் பயணம் செய்யும் நாள் தவிர்த்து அதற்கு முன்னதாக 60 நாட்கள் முன்கூட்டி மட்டுமே ரயில் டிக்கெட் புக்கிங் செய்து கொள்ள முடியும். இந்த புதிய விதி நவம்பர் 1ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், இதற்கு முன்னதாக 120 நாள் முன்கூட்டிய ரயில் டிக்கெட் புக் செய்திருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது. அவர்கள் தங்கள் புக்கிங் தேதிகளில் பயணிக்கலாம். கடந்த வியாழக்கிழமை இரவு (31.10.2024) வரை செய்யக்கூடிய 120 நாள் முன்கூட்டிய ரயில் டிக்கெட் புக்கிங் செல்லுபடியாகும் என ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தது. 31.10.2024 வரை புக்கிங் செய்யும் 60 நாட்களுக்கு மேலான ரயில் டிக்கெட்களை கேன்சல் செய்ய அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.