Homeசெய்திகள்தமிழ்நாடுசாலையோர மின்கம்பம் மீது அதிவேகமாக மோதிய தனியார் பேருந்து... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 30க்கும் மேற்பட்ட...

சாலையோர மின்கம்பம் மீது அதிவேகமாக மோதிய தனியார் பேருந்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 30க்கும் மேற்பட்ட பயணிகள்!

-

- Advertisement -
kadalkanni

தருமபுரி அருகே இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் தனியார் பேருந்தை திருப்ப முயன்றபோது, எதிர்பாராத விதமாக மின் கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

தருமபுரியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. கடத்தூர் அருகே அருர் சாலையில் உள்ள பாசாரப்பட்டி பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, கடத்தூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் திடீரென அரூர் சாலையில் திரும்பினார்.

இதனால் தனியார் பேருந்து ஓட்டுநர் இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பேருந்தை இடதுபுறமாக திருப்பினார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து,  சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர்.

இதனிடையே, பேருந்தில் பொருத்தியிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் விபத்து குறித்த பதைபதைக்க வைக்கும் காட்சிகள் பதிவாகிய நிலையில், அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ