spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஉள்ளாடைக்குள் தங்கம் கடத்தி வந்த பயணி

உள்ளாடைக்குள் தங்கம் கடத்தி வந்த பயணி

-

- Advertisement -
உள்ளாடைக்குள் தங்கம் கடத்தி வந்த பயணி
சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து வந்த பயணி சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்ப்பட்டார்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.

we-r-hiring

அந்தவகையில் வெள்ளிக்கிழமை, சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடந்து கொண்டார்.

அவரை தனியாக அழைத்து சோதனை செய்த போது அவர் தனது உள்ளாடையில் பேஸ்ட் வடிவில் மறைத்து எடுத்து வந்த 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது.

சுங்கத்துறை அதிகாரிகள் கடத்தி வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்து அந்த பயணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

MUST READ