தொண்டு நிறுவன பணியாளர்களுக்கு அரசு நல வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சரிடம் எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்போம் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கில் சமூக செயல்பாட்டு இயக்கத்தின் 4-வது மாநில மாநாடு சமூக நீதியை மையப்படுத்திய தேசிய வளர்ச்சியில் தொண்டு நிறுவனங்களின் பங்கு என்ற தலைப்பில் மாநில மாநாடு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாநிலத்திட்டக்குழு துணைத்தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், பொருளியல் அறிஞர். ஆத்ரேயா கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 500க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட சமூக செயல்பாட்டு இயக்கத்தின் நான்காவது மாநில மாநாடும், சமூக நல்லிணக்கம் போன்ற தலைப்புகளில் கருத்தரங்கமும் நடைபெற்றது. மேலும், தொடர்ந்து இந்த தொண்டு நிறுவன பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்பட வேண்டும் என இந்த மாநாட்டில் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
பின்னர், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில்,
எனக்கும் இந்த சமூக செயல்பாட்டு இயக்கத்துக்கும் உள்ள தொடர்பு நகமும் தசையும் போன்றது. எனது வாழ்வில் ஒரு கண் அரசியல் என்றால் மறு கண் சமூக செயல்பாட்டாளர் சங்கம். இன்றைய சமூகத்தில் எந்த பிரச்சினை என்றாலும் தட்டிக்கேட்கனும் நான் ஒரு politician என்று சொல்வதை விட political activist social activist ஆக இருக்க வேண்டும்.
இந்த சமூகத்தை பற்றிய புரிதல் வேண்டும். ஜாதி, மதம் எதையெல்லாம் பெரிய பதவி வகிக்கிறது இதெல்லாம் ஒரு அவமானம் திருவள்ளுவர் கூறியது போல் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எல்லோரும் சமம் என்ற உணர்வு வேண்டும். தற்போது சமூக செயல்பாட்டை மிக தீவிரப்படுத்த வேண்டிய ஒரு சூழலில் நாம் இருக்கிறோம். தொண்டு நிறுவன பணியாளர்களுக்கு நல வாரியம் அமைத்திட வேண்டும் என்று அவர்களது கோரிக்கையை முதலமைச்சரிடம் கொண்டு சென்று நடவடிக்கை எடுப்போம் என்றார்.