பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பெணிற்கு ரயிலில் பிரசவம் நடந்துள்ளது. பிரசவத்திற்கு உதவி செய்த போலீசாருக்கு பாராட்டு குவிகிறது.
பெங்களுரிலிருந்து (Bangalore) to (Bhagalpur) பாகல்பூர் பயணம் செய்து வந்த திருமதி நேகா குமாரி (19) என்பவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் நேற்று மாலை 18-02-2023- ரயிலில் பயணம் செய்தபோது ரயில் ஜோலார்பேட்டை கடந்து வாணியம்பாடி செல்லும் பொழுது நேகா குமாரி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அப்போழுது உடனிருந்த சக பெண் பயணிகள் உதவியுடன் அழகான பெண் குழந்தை பிறந்தது.


இது குறித்து உடனடியாக காட்பாடி ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ரயில் நிலையத்தில் உள்ள சிஎம்சி டெஸ்க் மருத்துவர்கள் உதவியுடன் ரயில்வே இருப்பு பாதை பெண் காவலர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோருடன் சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர். தாயும் குழந்தையும் பாதுகாப்பாக 108 ஆம்புலன்ஸ் மூலம் காட்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிகழ்வினை ரயில் பயணிகள் வெகுவாக பாராட்டினர். இதை அறிந்த ரயில்வே காவல்துறை உயர் அதிகாரிகள் ADGP திருமதி வனிதா IPS DIG Dr. விஜயகுமார் IPS அவர்கள் பிரசவித்த பெண்ணுக்கு உதவிய காவலர்களை வெகுவாக பாராட்டியதாக இருப்பு பாதை ஆய்வாளர் சித்ரா தெரிவித்துள்ளார்.


