Homeசெய்திகள்தமிழ்நாடு"ஆவினில் சிறார்கள் பணியாற்றவில்லை"- அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

“ஆவினில் சிறார்கள் பணியாற்றவில்லை”- அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

-

 

"ஆவினில் சிறார்கள் பணியாற்றவில்லை"- அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!
Video Crop Image

வேலூர் ஆவினில் பால் திருட்டு என எழுந்த புகார் தொடர்பாக, சென்னையில் இன்று (ஜூன் 07) பிற்பகல் 02.30 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், “குறைந்த ஊதியத்தில் சிறார்களைப் பணிக்கு அமர்த்தியதாக வந்த தகவல் முற்றிலும் புறம்பானது. அம்பத்தூர் பால் பண்ணையில் சிறார்கள் பணியமர்த்தப்படவில்லை. ஆவினில் பணிபுரிந்து வரும் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் ESI, PF வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

‘பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை உயர்வு’- மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

ஆவின் பால் நிறுவனத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். எந்தவொரு தவறு நிகழ்வதையும் ஆவின் நிறுவனம் அனுமதிக்காது. சிறார்கள் தொடர்பான புகாரில் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வேலூரில் ஆவின் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தான் பால் திருட்டு விவகாரம் தெரிய வந்தது. ஆவினின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தடுக்க ஆவின் பால் பண்ணைகளில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ