spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்ப்பு

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்ப்பு

-

- Advertisement -

மகளிர் உரிமைத் தொகையில் புதிய பயனாளிகள் சேர்ப்பது தொடர்பாக ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட படலாம் என்று  தகவல் வெளியாகியுள்ளது.மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில்  புதிய பயனாளிகள் சேர்ப்புமகளிர் உரிமைத் தொகையில் புதிய விண்ணப்பதாரர்களை சேர்பதற்கான விண்ணப்பங்களை அச்சடிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில் வரும் ஜூன் மாதத்தில் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு பெண்களிடம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விரைவில் மேலும் விரிவுபடுத்தப்பட்டு அதில் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளதாகவும், குறிப்பாக தமிழ்நாட்டில் கூடுதலாக 2.30 லட்சம் பயனாளர்கள் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

we-r-hiring

அதன் படி, இந்த முறை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு,  முன்னாள் மாநகராட்சி ஊழியர்களின் மனைவிகளுக்கு, புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள், புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு உரிமைத் தொகை  வழங்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ