spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை உயர்நீதிமன்றத்துக்கு கூடுதலாக 4 நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கூடுதலாக 4 நீதிபதிகள் பதவியேற்பு

-

- Advertisement -

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கூடுதலாக 4 நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு கூடுதல் நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டதை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.

நீதிபதி

மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் இருந்த உயா் நீதிமன்ற தலைமை பதிவாளா் பி.தனபால், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆா்.சக்திவேல், சென்னை தொழிலாளா் நீதிமன்ற முதன்மை நீதிபதி சி.குமரப்பன், கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கே.ராஜசேகா் ஆகிய நான்கு பேரை சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவா் உத்தரவு பிறப்பித்திருந்தார். புதிய நீதிபதிகள் பதவியேற்பு விழா சென்னை உயர்நீதிமன்றம் வளாகத்தில் உள்ள கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

we-r-hiring

நிகழ்ச்சியில், பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, புதிய நீதிபதிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிய நீதிபதிகளுடன் சேர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்தது. இன்னும் 11 நீதிபதிகள் பதவிகள் காலியாக உள்ளன. பின்னர், புதிய நீதிபதிகளை வரவேற்ற தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், புதிய நீதிபதிகளான சக்திவேல், தனபால் மற்றும் குமரப்பன் ஆகியோர் உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர்களாகவும், நீதிபதி ராஜசேகர் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலராகவும், உயர் நீதிமன்றத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால், உயர் நீதிமன்றத்தின் மரபுகளை உறுதிப்படுத்துவார்கள் என குறிப்பிட்டார்.

MUST READ