spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகிளாம்பாக்கம், கோயம்பேட்டுக்கு கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கம்!

கிளாம்பாக்கம், கோயம்பேட்டுக்கு கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கம்!

-

- Advertisement -

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களுக்கு கூடுதலாக 300 இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகர் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையிலும் நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை 3 நாட்களுக்கும் வெளியூர் செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் ஆகிய மூன்று இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

we-r-hiring

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேற்குறிப்பிட்ட 3 பேருந்து நிலையங்களுக்கு மாநகர பேருந்துகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள 3 பேருந்து நிலையங்களுக்கு எளிதாக சென்று வெளிமாவட்ட நீண்ட தூர பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக மாநகர போக்குவரத்துக்கழகம் கூடுதலாக 300 சிறப்பு இணைப்பு பேருந்துகள் நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை  3 நாட்களில் இயக்கபட உள்ளது.

அரை நிர்வாகமாக தூங்கும் போதை ஆசாமிகள்.பயணிகள் வேதனை

மேலும், தீபாவளி பண்டிகை முடித்து ஊர் திரும்பும் பொது மக்களின் நலனுக்காக நவம்பர் 2ம் மற்றும் 3ம் தேதி களில் மாலை மற்றும் இரவுப்பணி 100 பேருந்துகள் இயக்க மாநகர போக்குவரத்துக் கழகத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ